Today:

பிறை – பிறையிடை – Period , பழந்தமிழன் கண்ட மெய்யியல் ; சிவகுமார் கோன்

Posted by YAALAN0

மெய் – உடல்; இயல் – இயக்கம் ; மெய் + இயல் – மெய்யியல் (உடலின் இயக்கம் ) ;யாருடைய உடலின் இயக்கம் ?? விடை கீழே; மனிதனின் சிந்தனையைத் தூண்டிய ஒரு நிகழ்வு பெண்ணின் சூலில் ( கருப்பையில் ) நடக்கும் சுழற்சியாகும். பூப்பெய்திய ஒரு பெண்னின் சூலில் மாதம் ஒரு முறை ஒரு சினை முட்டை (Ovum) உருவாகும். அச்சினை முட்டையோடு விந்து (Sperm) சேர்ந்து கருவானால் ( Embryo ), அக்கரு சூலின் உட்புறதில் ( Inner uterine wall /Endometrium) சென்று தன்னைப் பொருத்திக்கொள்ளும். இதற்கு ஏதுவாக சூலின் உட்புறப்பகுதி தன்னை ஆயத்தப் படுத்திக்கொள்ளும்.ஒரு வேளை கரு உருவாகாமல் இருந்தால், அச்சினைமுட்டையும், கருவைத்தாங்க சூலின் உட்புறத்தில் உருவான சில இரத்தநாளங்களும் உடைந்து இரத்தக்கசிவாக, பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக உடலை விட்டுவெளியேறிவிடும்.இந்நிகழ்வு மாதம் ஒரு முறை என்ற சுழற்சியில் நடக்கும்.இரத்தப்போக்கு ( தூமை ) மூன்று நாட்கள் நடக்கும். அடுத்த இருபத்து ஏழு நாட்களுக்கு தூய்மை இருக்கும்.இந்த 27 ( தூய்மை ) + 3 (தூமை ) = 30 நாட்கள் என்பது ஒரு சுழற்சியைக் குறிக்கும். மாது என்றால் பெண்; ஒரு பெண்ணின் சூலில் நடக்கும் இச்சுழற்சியின் கால அளவான 30 நாட்களுக்கு ஒரு மாதம் என்று பெயர். மாது -> மாதம் -> Month;இரத்தப்போக்கின் தொடக்கம் முதல் பதினைந்தாவது நாள் , சினை முட்டை தயாராக (Ovulation) இருக்கும்.ஒரு வேளை சினை சேராவிட்டால் அடுத்த பதினைந்து நாட்களுக்கு சூலின் உட்புறம் தேயத் தொடங்கும்.தூமை (3) + வளர்ச்சி (12) + தேய்ச்சி ( 15) = 30 நாட்கள் ; ஒரு பெண்ணுக்கு 15 வயதில் தொடங்கும் இச்சூழற்ச்சி 45 வயது வரை தொடரும். மொத்தம் 30 X 12 = 360 இரத்தப்போக்குகள் நிகழ்வது இயற்கையின் விதி.  

நிலவின் சுழற்சி:

——————————நிலவு நம் பூமியைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் முப்பது நாட்கள் ஆகும் ( ஒரு மாதம் 30 , ஒரு மாதம் 29 ; சராசரியாக 29.5 நாட்கள் ). இதனை ஒரு மாதம் அல்லது ஒரு திங்கள் என்கிறோம். தினமும் நிலவு ஒரேமாதிரிக் காட்சியளிக்காது. மறைநிலவு நாளிலும்,அடுத்த இரண்டு நாட்களிலும் (மொத்தம் மூன்று நாட்கள் ) நிலவு வானில் தென்படாது.மூன்றாம் நாள் மாலை மேற்கு வானில் மெல்லிய பிறை தென்படும். பிறப்பு -> பிறை . மூன்று நாட்கள் இறந்து போனதாகக் கருதப்படும் நிலவு மீண்டும் பிறக்கிறது என்று கருதிய பழந்தமிழர் பிறை என்றே மிகப்பொருத்தமாகப் பெயர்வைத்தனர்.
மூன்றாவது நாளின் பிறையில் இருந்து வளரத்தொடங்கும் நிலவு, பதினைந்தாவது நாளில் முழுநிலவாக கிழக்கு வானில் மாலை நேரத்தில் காட்சியளிக்கும்.நிலவு முழு வளர்ச்சியடைய எடுத்துகொள்ளும் நாட்கள் 15. அன்று இரவு பனிரெண்டு மணிக்கு மேலாக தேயத் தொடங்கும்.அடுத்த பதினைந்து நாட்கள் நிலவின் தேய்பிறைக் காலமாகும். இந்த (15 + 15 = 30 ) முப்பது நாட்களை ஒரு மாதமென்றும் ஒரு திங்கள் என்றும் அழைக்கக் காரணம் உள்ளது. பிறை-சூல்:ஒரு பெண்ணின் சூலில் நடக்கும் சுழற்சிக்கும், நிலவின் சுழற்சிக்கும் ஒற்றுமை உள்ளது.இரத்தப்போக்கு தொடங்கும் நாள் மறைநிலவு நாளுக்கும், மூன்று நாள் நடக்கும் இரத்தப்போக்கு வானில் நிலவு இல்லாத அம்மூன்று நாட்களுக்கும்,சூலின் உட்புற வளர்ச்சி நிலவின் வளர்பிறைக்கும், சினை முட்டை ( Ovum ) தயாரான நாள் முழுநிலவுக்கும், சூலின் உட்பகுதி தேயும் காலம் நிலவின் தேய்பிறைக்கும் ஒப்புமையாக விளங்குகிறது.
நிலவுக்கு இன்னொரு பெயர் திங்கள் என்பதால் “ முப்பது நாள் கொண்ட சுழற்சி “ என்ற ஒரு பொருள் தரும் இரு சொற்களாக மாதமும் திங்களும் வழக்கத்தில் இருந்து வருகின்றன. 

ஒரு மாதத்தின் பிறப்பை மூன்றாம்நாள் தோன்றும் பிறையை வைத்து முடிவுசெய்வர். ஒரு பெண்ணுக்கு மூன்றுநாள் நடுக்கும் இரத்தப்போக்கு நின்றவுடன் அவளின் சூல் புதிதாகப் பிறப்பெடுக்கிறது.மாது பிறப்பு -> மாதப் பிறப்பு ;இரண்டு பிறைகளுக்கு இடைப்பட்ட காலம் முப்பது நாட்களாகும்.பிறை + இடை = பிறையிடை;மனிதன் கண்ட முதல் சுழற்சியே பெண்ணின் சூலில் நடக்கும் சுழற்சியும்,நிலவின் சுழற்சியுமே ஆகும் என உறுதியாகக் கூறலாம்.காரணம், பூமி தன்னைத்தானே சுற்றுகிறது, நிலவு பூமியைச் சுற்றுகிறது, பூமி சூரியனையும் சுற்றுகிறது என்றெல்லாம் உணர அவனுக்குப் பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கும்,ஆனால் நிலவின் சூழ்ச்சியை ஓரிரு மாதங்களிலேயே உறுதிசெய்திருப்பான் அக்கால மனிதன். எனவே ஒரு புள்ளியில் தொடங்கி மீண்டும் அப்புள்ளியில் வந்து சேரும் சுழற்சியை “ பிறையிடை “ என்ற சொல்லாலும் அழைக்கலாம்.இந்த “ பிறையிடை “ என்ற சொல்லே ஆங்கிலத்தில் “ Period “ என்று வழங்கப்படுகிறது.பிறையிடை-> Period வெறும் உச்சரிப்பு மட்டும் ஒத்துப்போகவில்லை.இச்சொற்கள் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன; அதாவது சுழற்சி.இயற்பியல் பாடத்தில் அலைகளைப் படமாகப் போட்டு விளக்கும் போது அந்த அலையின் இரு மேடுகளுக்கு இடையில் உள்ள காலத்தை “ Time period “ என்றே அழைக்கின்றனர்.பள்ளிகூடத்தில் சுழற்சி அடிப்படையில் வரும் “ maths period “ , “ physics period “ , “ chemistry period “ போன்ற வகுப்புகளின் பெயர்களில் இருக்கும் ” period ” என்ற சொல் சுழற்சியையே குறிக்கிறது.இவற்றையெல்லாம் விட ஒரு பெண்ணின் மாதவிடாய் நடக்கும் மூன்று நாட்களைக் குறிக்கும் இன்றைய ஆங்கிலச் சொல்லே “ period “ தான். எவ்வளவு பொருத்தமாக இப்பெயர்கள் அமைந்துள்ளன !! நான் பல ஆங்கில மருத்துவர்களிடம் விசாரித்துப் பார்த்தவரையில் அவர்களின் பாடத்திட்டத்தில் சூலின் சுழற்சியைப் ( Menstrual cycle ) பற்றி பக்கம் பக்கமாக விளக்கியுள்ளார்களே தவிர ஒரு இடத்தில கூட சூலுக்கும் நிலவுக்கும் உள்ள தொடர்பை விளக்கியது கிடையாது.இதுதான் தமிழரின் மரபறிவுக்கும் வீணாய்ப்போன ஆங்கிலக்கல்விக்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடு.தற்போது உள்ள கல்வி நம் சிந்தனைத் திறனை மொத்தமாக மழுங்கடிக்கவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.ஒரு பெண்ணின் உடலியக்கதைப் முழுவதும் புரிந்து கொண்ட ஒரு பண்டைய தமிழ் ஆண்மகன் தொடங்கிவைத்ததே தமிழ்ப் பழங்குடிகளின் சந்திரவழிபாடாகும்.சூலம்,பிறை,பெண் தெய்வம்,தாய் தெய்வம்,இயக்கியம்மன்,கன்னி மரியாள் என அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. 

Tags

Leave Comment |

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

(required)
(required)

A- A A+