Today:

அங்கமும் வேதமும் ; யாழன் 

Posted by YAALAN0

உலகியல் தொடர்பான இரக்கம்,துன்பம்,கண்ணீர் என்பன ஒருவனின் அறியாமையின் அடையாளங்கள்,மனிதர்களின் ஒவ்வொரு செயல்களும் பிரபஞ்சத்தின் முக்குணங்களால் தாக்கமடைந்து மாசு அற்றதாகின்றதுநீங்கள் எதை செய்தாலும் நன்மையே,எது எங்க நடந்தாலும் பிரபஞ்சம் அதற்கு இறுதியில் நன்மை வடிவம் கொடுத்தே செயல்படுத்துகின்றது,இதை கீதையில் அழகாக சொல்லியிருப்பார்கள்,”எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது,எது நடக்கின்றதோ,அதுவும் நன்றாக நடக்கின்றது,எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்” என்றும் கடமையை செய் பலனை எதிர்பாராதே என்று சொல்வது இதற்காகதான்,வேதங்களின் அடிப்படை வேதமான ரிக் வேதம் ஒட்டு மொத்த சுலோகங்களும் சேர்ந்து செயசொல்வது இதை மட்டுமே,”செய்” என்ற ஒரு வார்த்தையினுள் அத்தனையையும் அடக்கிவிடலாம்,நன்மை தீமை என்று இங்கு எதுவும் இல்லை,,நன்மை தீமை என்பது மனக்கணக்கு,மனம் என்பது மாயை,நிரந்தரம் இல்லாத ஒன்று.அதனை நம்பி நிலையில்லாமையில் உழல்வது பாவம்.

ஒருவன் தான் ஏன் வருந்துகின்றேன் என்பதை விசாரணை செய்யாமல் காலத்தை கழிப்பானாயின் அவன் நிறைவுள்ள மனிதனாக மாட்டான்.ஒருவன் மனதில் ஏன் வருத்துகின்றேன் என்ற விசாரணை தொடங்கும் போதே அவன் தன் வாழ்க்கையை வாழத்தொடங்குகின்றான்,நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு வகையில் ஆளப்படுபவர்கள்,நாம் உடல்களால் கட்டுப்பட்டு உறவு நிலை பந்தங்களால் பிணைக்கப்பட்டு இருக்கின்றோம்,எனினும் ஒவ்வொரு தனியனின் இதயத்திலும் இப்பிணைப்புக்களை உடைத்து பூரண சுதந்திரத்தை பெறுவதற்கான விடுதலை என்ற விதை விதைக்கப்பட்டே உள்ளது,பரமாத்தவிலிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் தாங்கள் மாற்றமில்லாத ஒரு பெருஞ் சக்தியை சுற்றி மாற்றமடைந்தவாறு உள்ளோம்,மாற்றமடையும்  உடலுக்கு நிலைக்கும் தன்மை இல்லை,மாறாத ஆன்மாவுக்கு அழிவு இல்லை இந்த பிரபஞ்சம் முழுவதும் இவ்வாறே மாறாத ஒன்றை பற்றி மாற்றமடையும் செயல்முறையை நடந்தவாறு உள்ளது,அழிவற்ற ஆன்மாவை எவராலும் அழிக்கமுடியாது,நீங்கள் அனைவரும் அழியாத அத்மாக்கள்,அழியப்போகும் உடம்பை நினைத்து கலங்க வேண்டியதில்லை,உனக்கு விதிக்கப்பட்ட கடமையை சரிவர செய்வதை விட மேலான சிறந்த தர்மம் ஒன்றில்லை,பலனை எதிர்பார்த்து கடமையை செய்வதற் மூலம் நாம் பாவங்களை பெற்று கொள்கின்றோம்,காரணம் இங்கே நன்மை கலவாத தீமையுமில்லை,தீமை கலவாத நன்மையுமில்லை,ஆத்மாக்களை தாங்கி நிற்கும் உடல்களே அழிகின்றன,ஒரே புத்தி,ஓரே செயல் கொண்டு கடமையை செய்,எவன் எதிலும் பற்றுஅற்றவனாக நன்தை வந்த பொழுதும் தீமை வந்த பொழுதும் கலங்காமல் இருக்கிறானோ அவனுடைய அறிவு நிலையானது,கோபத்தினால் மனக்குழப்பம் ஏற்படுகிறது,மனக்குழப்பத்தால் ஞாபகமறதி ஏற்படுகின்றது,ஞாபக மறதியால் புத்தி நாசமும் புத்தி நாசத்தால் எல்லாமும் ஏற்படுகின்றது.

அன்புடன் யாழன் 

Tags

Leave Comment |

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

(required)
(required)

A- A A+