Today:

தமிழர்களை நிமிர்த்தும் தற்கொடைகள் ; யாழன்

Posted by YAALAN0

தியாகி திலீபன் இந்திய-சிங்கள தமிழின வலிந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கண்டித்தும் அதனை திரும்ப பெறக்கோரியும் நல்லூரில் உண்ணாவிரத அஹிம்சை அறப்போராட்டத்தை மேற்கொண்டு தனது உயிரை தமிழ் மக்களின் சுகவாழ்வுக்காய் ஆகுதியாக்கி உயிரிழந்தார்,எனினும் அன்று அவர் முன்வைத்த கோரிக்கைகளில் எதுவுமே இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை நிலையிலும் அவரது தியாகம் ஒப்பற்ற ஓர் வடிவமாக ஏன் தமிழர்களால் பார்க்கப்படுகின்றது என்ற கேள்வி எழும் ?

தமிழர்கள் பண்டைய காலந்தொட்டு அறிவில் சிறந்து விளங்கியவர்கள்,ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்பார்கள்,அறிவில் சிறந்து விளங்கும் இனமொன்று தன்னை அஹிம்சையில் நிலை கொள்ள செய்வதே சிறப்பானதாகும்,இவ்வாறு திலீபனின் அஹிம்சை போராட்டம் ஆனது தமிழர்களுக்கு அஹிம்சை மீது இருந்த அசையாத பற்றுறுதியை உலகத்திற்கு விளக்கியது.உண்ணாநோன்பு இருந்து தனது உடலை பலவீனமாக்கிய பார்த்தீபன் தமிழரின் மனதை செம்மைப்படுத்தினான்,திலீபனின் போராட்டம் அன்று உலகத்தினால் உரிய காலத்தில் உணரப்பட்டிருந்தால் தமிழர்கள் தொடர்ந்து இழந்த அத்தனையையும் அஹிம்சை வழியில் போராடி மீட்டிருப்பார்கள்,ஆனாலும் எமது வழிகாட்டியான வரலாறு எமக்கு அஹிம்சை தொடர்பாக கசப்பான பாடத்தை தந்துவிட்டு எம் திலீபனை தன்னுடன் எடுத்துகொண்டது,கண் கலங்கி நின்ற தமிழர்களை திலீபனின் தியாகம் செம்மைப்படுத்தியது,அத்தனை வழிகளும் முடப்பட்டிருந்ததை கண்டு தமிழர் ஆயுதம் ஏந்த நிர்பந்திக்கப்பட்டிருந்தனர்,திலீபனின் அஹிம்சை அளித்த ஆன்ம பலத்தில் ஆயுதம் கொண்டே எழுச்சியடைந்தனர்,இவ்வாறு ஒருவனின் மனமொருமித்த அஹிம்சை போராட்டம் ஒரு தேசத்துக்கே ஆத்ம பலத்தை கொடுத்து காலம்தோறும் இலக்கை நோக்கி இயக்கியவாறு உள்ளது,இவ்வாறான தற்கொடை போராட்டங்களை ஆழமான மனவுறுதி படைத்தவர்களால் மட்டுமே செயல்படுத்தமுடியும்,காலநதி இவ்வாறு பலரை தன்னுள் இழுத்தவாறே வேகமாக தன் பயணத்தை ஆர்முடுக்கியவாறு செல்கின்றது,இவ்வாறான தனி ஒருவன்கள்தான் ஆங்காங்கே இருந்து உலகை அசைத்து இயங்க செய்தவாறு உள்ளனர்,அவர்கள் தம் தோழர்கள் மீதும் மக்கள் மீதும் கொண்ட ஆழ்ந்த அன்பினால் உந்தப்பட்டு தம்மை ஆகுதியாக்கி கொள்ள துணிகிறார்கள்,தமது தற்கொடை தியாகம் தமது கோரிக்கைகளுக்கு வலுவூட்டி வாழவைக்கும் என்ற பெருத்த நம்பிக்கையில் அவர்கள் செல்கிறார்கள்,அவர்கள் தங்கள் உயிரை இழந்து தேசத்தின்,இனத்தின் நம்பிக்கைகளுக்கு உயிர் கொடுக்கும் தியாகிகள்,அவர்கள் காலத்தினால் இனத்துக்கு செய்யும் மாபெரும் தியாகத்தை  நன்றியுடன் நினைத்து பார்த்தல் நல்ல தமிழ் பண்பாடு

Tags

Leave Comment |

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

(required)
(required)

A- A A+