Today:

அமெரிக்காவில் நடைபெறும் துப்பாக்கி சூடுகளின் பின்புலம்

Posted by YAALAN0

அமெரிக்காவில் கடந்த தசாப்தங்களாக நடைபெற்று வரும் துப்பாக்கி சூட்டு சம்பங்களின் பின்புலத்தில் இருப்பது அமெரிக்க அரசும் அதன் புலனாய்வு பிரிவு அமைப்புக்களுமே,அமெரிக்காவில் சிறிது சிறிதாக பொதுமக்கள் ஆயுத பாவனை தடை சட்டத்தை கொண்டுவர முயற்சித்து கொண்டிருக்கும் அரசுகளின் ஒரு வகையான காய் நகர்த்தலே இவ்வகையான பொது இடங்களில் நடைபெறும் சூட்டு சம்பவங்கள்
உலகையே அடக்கி ஆள்வதாக மார்தட்டும் அமெரிக்க அரசால் உள்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெறும் இவ்வகையான தடுத்து நிறுத்தமுடியாமல் இல்லை.அமெரிக்க மக்களிடம் சொந்தமாக பயன்பாட்டிலுள்ள உள்ள ஆயுதங்களை தடைசெய்து அவற்றை அழிக்கவே இவ்வாறான சூட்டு சம்பவங்களை தாமாக ஏற்படுத்தி அதை தமது திட்டத்திற்கு ஆதரவாக தமது ஊடகங்களால் மக்களிடம் திணிக்கின்றனர்.ஒவ்வொரு முறை அமெரிக்காவின் ஒவ்வொரு பகுதியில் நடைபெறும் சூட்டு சம்பவங்களின் பின்னர் பாதிக்கப்பட்டவர்களை பேட்டி எடுப்பதாக கூறி தம்மால் ஒழுங்கு செய்யப்பட்ட சிலரை வைத்துகொண்டு அவர்களை வைத்து “அமெரிக்காவில் பாவனையிலுள்ள பொதுமக்களின் துப்பாக்கிகளை தடை செய்யுங்கள் ” அவற்றின் மூலமே இவ்வாறான சம்பவங்களை தடை செய்யுங்கள் என்ற கருத்தை மக்கள் மத்தியில் ஊடகங்களினால் திட்டமிட்டு பரப்புகின்றனர்,நடைபெறும் சூட்டு சம்பவங்களை திருப்பி திருப்பி போட்டுக்காட்டி மக்கள் மனதை மாற்றுவதற்கு பெரும் பிரயத்தனம் மேற்கொள்ளுகின்றனர்,அமெரிக்க புலனாய்வு துறைகளினால் திரைமறைவில் திட்டமிடப்படும் இவ்வகையான தாக்குதல்கள் மூலம் அமெரிக்க மக்களை தொடர்ந்தும் பயப்பீதியினுள் வைத்திருந்து அரசு தமது திட்டங்களை சாதித்துகொள்கின்றது.

சுதந்திரம் பெற்றது முதல் இன்றுவரை அடுத்த நாட்டினுள் மூக்கை நுழைத்து தமது முழுகாலத்தையும் போர்களில் கழித்துவரும் அமெரிக்க அரசுகள்,உள்நாட்டில் உள்ள தமது மக்களின் ஆயுதங்கள் ஒருகாலத்தில் தம்மை நோக்கை திரும்பும் ஆபத்து உள்ளதை காலத்தே உணர்ந்து இவ்வாறான சூட்டு சம்பவங்களை ஏற்படுத்தி அதன்மூலம் மக்களின் ஆயுதங்களை கட்டுபடுத்த காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றது
பலவகையிலும் அடிமைப்பட்டுள்ள அமெரிக்கமக்கள் தமது இறுதி ஆயுதத்தையும் பறிகொடுத்து அரசின் திட்டம் வெற்றி பெற்றால் அமெரிக்க அரசின் முழுமையான சுயரூபத்தை உலகமே காணும் அவற்றினால் விளையப்போகும் ஆபத்துக்களின் பட்டியல் எல்லையற்றது,அமெரிக்க அரசின் கட்டுபாடு வியட்நாம் போரின் போது மக்களின் பெரும் போராட்டத்துக்கு பணிந்து தமது வியட்நாம் மீதான போரை அரைவாசியில் நிறுத்திவிட்டு வந்தது போன்ற நிலைமைகளை தீர்மானித்தது அமெரிக்க மக்களின் கையில் உள்ள துப்பாக்கிகள் தமக்கு எதிராக திரும்பிவிடும் என்ற பயத்தில்தான்,இந்த பயம் அமெரிக்க அரசுக்கு இருக்கும் வரை அமெரிக்க அரசினால் ஒரு குறிப்பிட்ட எல்லையை தாண்டி போகமுடியாமல் காலங்கள் கழிவதாலேயே பொதுமக்களின் கையிலுள்ள ஆயுதங்கள் மீதான தடை சட்டங்களை கொண்டுவந்து அவற்றை அழிக்கவே இவ்வாறான சூட்டு சம்பவங்கள் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படுகின்றனர்
மக்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்

விழிப்புதான் விடுதலைக்கு முதல் படி

படம் : 1973 பாடசாலை ஒன்றுக்கு அநாமதேயமாக வழங்கப்பட்ட ஆயுத அச்சுறுத்தலை முறியடிக்க பொதுமக்கள் தமது ஆயுதங்களுடன் திரண்டு பாடசாலையை காவல் காத்தனர்,

Tags

Leave Comment |

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

(required)
(required)

A- A A+