Today:

ஊடகங்களும் உளவு அமைப்புக்களும் : உளவியல் யுத்தம்

Posted by YAALAN0

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதா ? இல்லை தொடர்ந்து நீடித்திருப்பதா ? என்ற வகையில் நடத்தப்பட் ட வாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமரின் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்து இருப்பது என்ற கருத்தை நிராகரித்த மக்கள் பிரித்தானியா ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்று முடிவு எடுத்தமையை தொடர்ந்து பிரித்தானிய அதிபர் கமெரூன் தனது பதவியை விட்டு விலகி உள்ளார்.
பிரித்தானியா ஒன்றியத்திலிருந்து விலகுவதா ? இல்லையா என்ற பிரச்சாரம் கடந்த சில காலமாக தொடர்ச்சியாக பல தரப்புக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.இதன் இதன் ஒரு கட்ட மாக அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பிரித்தானியா வருகை தந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரிந்து செல்வது ஆபத்தானது என்று எச்சரிக்கை செய்திருந்தார்,

மக்களை திசைதிருப்ப இங்கு ஒருவகையான யுக்தி பயன்பட்டு இருப்பது ஆழமாக பார்க்கும்போது தெரியவரும்.மக்களிடம் திரும்ப திரும்ப பிரியவேண்டாம் என்று வேண்டுமென்றே பிரச்சாரத்தை ஊடகங்கள் வாயிலாக செய்யப்பட்டு மக்களை ஒன்றியத்திலிருந்து பிரிவதற்கு வாக்களிக்க தூண்டியுள்ளனர்,இதன் ஏகாதிபத்தியம் தனது வழமையான ஆஸ்தான கோட் பாடான ” ஒரு கல்லில் பல மாங்காய்கள் ” பாவித்து அதில் வெற்றியும் கண்டுள்ளதுஇந்த . பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிவதற்கான ஆணையை மக்களே வழங்கி உள்ளனர் என்று உலகை நம்ப வைத்து இதன் பின்னாளில் உலக ஏகாதிபத்தியம் மூலமாக வைத்து தான் செய்யும்,செய்யவிருக்கும் எல்லாவற்றையும் மக்கள் எடுத்த இந்த முடிவின் பின்விளைவுகள்,பிரச்சினைகளே என்று அனைத்தையும் மக்களின் மேல் போட்டுவிட்டு உலக ஏகாதிபத்தியம் வழமைபோல் தன்போக்கில் போய்க்கொண்டே இருக்கும்.ஊடகங்களும் உளவு அமைப்புகளையும் பயன்படுத்து உலகெங்கும் மக்களின் நியாயமான கருத்துக்களை திரித்து எதுவாக பயன்படுத்தி கொண்டே தமது காய்களை நகர்த்திவருகின்றன.

ஏற்கனவே ஸ்காட்லாந்து ஐக்கிய ராச்சியத்திலிருந்து பிரிவதற்கு மக்கள் கருத்தை அறிய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வாக்களிப்பதற்கு வாக்குசாவடியில் பென்சில்களையும் சிறுது நேரத்தில் அழியும் மைகளையுடைய பேனைகளையும் விநியோகித்த பிரித்தானியா உளவு அமைப்புக்கள் மோசடியாக அந்த தேர்தலை பிரித்தானிய அரசுக்கு சாதகமாக திருப்பி இருந்தனர்.பிரித்தானியா மக்களும் ஸ்காட்லாந்து தம்மில் இருந்து பிரிந்து போவதை விரும்பவில்லை,எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து தாம் விலக வேண்டும் என்பதில் பிரித்தானியா மக்களை ஊடகங்களும் உளவு அமைப்புக்களும் திசை திருப்பி அதில் வெற்றி கண்டுள்ளன .எனினும் ஒரு பகுதி மக்கள் விழிப்புணர்வாக இருந்ததுடன் இது தொடர்பாக பாரிய பிரச்சாரம் ஒன்றையும் சமூக வலைத்தளங்களில் செய்திருந்தனர்.பென்சில்களையோ வாக்குச்சாவடியில் தரும் பேனைகளையோ பாவிக்கவேண்டாமென்றும் சொந்தமாக பேனைககளை பாவிக்கவேண்டுமென்றும் கோரியிருந்தனர் .

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியாவின் விலகல் முடிவை தொடர்ந்து ஸ்காட்லாண்டும் கடந்த முறை ஐக்கியராச்சியத்தில் இருந்து தாம் நீடிக்க எடுத்த முடிவை மீள் பரிசீலிக்கலாம்,உலக ஏகாதிபத்தியத்தின் பொழுதுபோக்கு சதுரங்க ஆட் டத்தில் மக்கள் வெறும் காய்கள்

Tags

Leave Comment |

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

(required)
(required)

A- A A+