Today:

தொலைநோக்கற்ற கல்வி என்றும் தொல்லையே

Posted by YAALAN0

மாணவன் : ஏன் படிக்கிறம் ?
ஆசிரியர் : சாப்பாட்டுக்குதான்

மாணவன் : சாப்பாட்டுக்குத்தான் படிக்கிறம்னா எதுக்கு படிப்பான்
நேர வயல்,தோட்டத்தில இறங்கி விவசாயம் பார்க்க வேண்டியதுதானே?

ஆசிரியர் : படிச்சா நோகாம இருந்து சாப்பிடலாம்
மாணவன் : நோகாம இருந்து சாப்பிட்டா நோய் வருமே,அதுக்கு செலவு ?

ஆசிரியர் : நல்லா படிச்சா கை நிறைய உழைப்பீங்க தானே,அதில ஒரு பகுதியை உடல்நலத்துக்கு செலவு செய்யலாம்

மாணவன் : விவசாயம் செய்து நமது உணவை நாமே தயார் செய்தா நோய்கள் எதுக்கு வரப்போகுது ?

ஆசிரியர் : நீர் மட்டும் ஏன் இப்படி கதைக்கிறீர் , மற்ற மாணவர்களை பாரும், அவர்கள் நான் சொல்லுறதை கேட்டு என்ன அழகா தலை ஆட்டுறாங்கனு?

இப்படி இருந்தா உமக்கு ஒருத்தரும் வேலை தரமாட்டாங்க
நீர் system த்தை collapse பண்ண பாக்கிறீர் , நீர் சொல்லுற மாதிரி எல்லாம் செய்ய ஏலாது

மாணவன் : system ? சொந்தமா நம் முன்னோர் வழியில ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பெறுமதியான சிஸ்டத்தை சில நூறு ஆண்டுகள் ஆண்ட வெள்ளைக்காரனுக்கு அடகு வைச்சிட்டு அதுக்காக வங்காலத்து வாங்கிறது தப்பில்லையா?

ஆசிரியர் : பெறுமதியான கல்வி தரம் உங்க முன்னோர்களிடம் இருந்திருந்தால் ஏன் அவர்களுக்கு பின்னால் வந்த சந்ததி வெள்ளைக்காரனிடம் கையேந்தியது ?

மாணவன் : தமிழர்களுக்கு இடையில் இருந்த ஒற்றுமை சிதைந்தமையினால் இன்னொரு இனத்துக்கு அடிமைப்பட்டு இருந்த நேரம் பார்த்தே இந்த தளைகள் அனைத்தும் தமிழர் முதுகில் ஏற்றப்பட்ட்து.இவற்றால் தமிழர்களிடையில் தலைமுறை இடைவெளி இன்று வரை சரிசெய்யப்படவில்லை,இவையே இன்றைய எமது இழிநிலைக்கு மூல காரணம்

ஆசிரியர் : சரி இவற்றை மாற்றுவதற்கு பதிலாக வெள்ளைக்காரனின் இருக்கிற கல்வி அமைப்பை சரி செய்து சில மாற்றங்களுடன் அதையே நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் தானே ?

மாணவன் : இல்லை ,நாம் நமது சொந்த கால்களை கொண்டு நடப்பதுதான் எமக்கும் எமது நாளைய சந்ததிக்கும் தொலைநோக்கான நன்மையை விளைவிக்கக்கூடியது.

ஆசிரியர் : இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் ?

மாணவன் : தமிழர் வழி கல்வியை எந்தவித தாமதமும் இல்லாமல் நடைமுறைப்படுத்தவேண்டும், பல்துறை சார் தமிழர் வளங்களில் இருந்து உருவாக்கப்பட்டு அவை நடைமுறை வாழ்வினுடு கற்க எதுவாக அமையவேண்டும்,எல்லாற்றவற்றுக்கும் அடிப்படையாக ஒழுக்கமும் சுதந்திரமும் அமைத்தல் வேண்டும்.

ஆசிரியர் : ஆம், உண்மை , பூரண சுதந்திரத்திலேயே உண்மை கல்வியும் ஒழுக்கமும் நிறைவு அடைகின்றன.

மாணவன் : தமிழர் கல்வி தனிவழி

Tags

Leave Comment |

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

(required)
(required)

A- A A+