Today:

இமாலய அடுக்குகளில் வாழும் உலகின் மகிழ்ச்சியான குடிகள் : HUNZAS

Posted by YAALAN0

வடஇந்தியா,காஷ்மீர்,சீனா எல்லைகளை கொண்ட இமாலயமலை சிகரங்களில் வாழும் ஹன்சஸ் குடிமக்கள் உலகிடமிருந்து மிகவும் ஒதுக்கப்பட்டவர்களாகவும் அதேவேளை உலகிலேயே அதிக மகிழ்ச்சியான மக்கள் கூட்டமாகவும் வாழ்ந்து வருகின்றனர்.கடல் மட்டத்தில் இருந்து 9௦௦௦ அடி உயரத்தில் சுமார் 3௦௦௦௦ எண்ணிக்கையிலான மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் அகராதியில் நோய் என்ற வார்த்தையே இல்லை,சராசரியாக 100 வருடங்கள் வாழும் இவர்களில் பெண்கள் 60 வயது வரை பிள்ளைகள் பெற்றுக்கொடுக்கின்றனர்,ஆண்கள் 90 வயது வரை பிள்ளைகளுக்கு தந்தை ஆகின்றனர்.
இவர்களின் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன என்பதுக்கான விடை “உணவே சிறந்த மருந்து” என்பதற்கு இணங்க இவர்கள் சிறந்த உணவுப்பழக்கத்தை கடைப்பிடிக்கின்றனர்.காலையில் 5 மணிக்கு நித்திரைவிட்டு எழும் இவர்கள் வெறும் வயிறுடன் வேலை செய்கின்றனர்,இவர்களின் நாளைக்கான முதல் உணவை மதியம் 12 மணிக்கு உண்பார்கள்.உணவாக பெரும்பாலும் உலர்ந்த பழங்கள்,பால்,நெய்,பாற்கட்டி என்பவற்றையும் பச்சை காய்கறிகள்,தானியவகைகளையும் உண்கின்றார்கள்.மிகவும் குறைந்த அளவான உணவையே உட்கொள்ளும் இவர்களின் ஆரோக்கியத்தின் ரகசியம் அளவான உடல் உழைப்பும்,கூடியவகையில் காய்கறிகள்,பழங்கள் என்பவற்றை உணவில் சேர்ப்பதுடன் வாரத்தில் ஒருநாள் விரதம் இருக்கிறார்கள்.
சில வகை யோகாமுறைகள்,மூச்சுப்பயிற்சி என்பவற்றை செய்யும் இவர்கள் அமைதியானவர்களாகவும் எதிர்காலத்தை பற்றி கவலைப்படாதவர்களாக நிகழ் காலத்தில் மிகவுன் மகிழ்வுடன் வாழ்கின்றனர்…

உலகின் மிகவும் ஆச்சரியமான மக்கள் குடிகளான இவர்களின் வாழ்க்கை முறை எளிமையாகவும் அந்த கணத்தில் வாழ்வதாகவும் இருகின்றமையே இவர்களின் அதிக ஆயுள்வளர்ச்சிக்கு காரணமாகும் திரஎரி

fgr

Tags

Leave Comment |

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

(required)
(required)

A- A A+