Today:

புகைப்பிடிப்பால் விளையும் பாதிப்புக்களை கட்டுப்படுத்த . . .

Posted by YAALAN0

புகைபிடிப்பதன்  மூலம் உட்செல்லும்  நிக்கொட்டினால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமானவை. உலகில் நொடிக்கு ஒருவரும் ஆண்டுக்கு 60 இலட்சம் பேரும் சிகரெட் புகைபிடிப்பதனால் இறக்கின்றனர்.புகைப் பழக்கத்தை படிப்படியாக நிறுத்தாமல் ஒரேயடியாக நிறுத் துவதே சிறந்தது. இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. புகைக்காமல் இருந்தால் ரத்த அழுத்தம், இருதயத் துடிப்பு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு சீரடையும். புகை பிடிக்காமல் ஒருநாள் இருந் தால், ரத்தத்தில் கலந் திருக்கும் கார்பன் மோனாக்சைடு வெளியேற்றப்படுகிறது. நுரையீரல் சுத்தமாகிறது. இரண்டு நாட்கள் இருந்தால், உடலில் சேர்ந்துவிட்ட நிக்கோடின் அகற்றப்படும்.சுவைக்கும் திறனும், நுகரும் திறனும் அதி கரிக்கும்.மூன்று நாட்களுக்கு பிறகு சுவாசிப்பது எளிதாகிறது. 2 முதல் 21 வாரங்களுக்குள் ரத்த ஓட்டம் சீரடைகிறது. 3 முதல் 9 மாதங் களுக்குள் இருமல், தும்மல் போன்ற குறைபாடுகள் குறைகிறது. நுரை யீரலில் செயல்பாடு 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கிறது.

புகை பிடிப்பதை நிறுத்தி 4 ஆண்டுகளுக்கு பிறகு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு, புகைப்பவர்களை ஒப்பிடும் போது பாதியாக குறைகிறது. 10 ஆண்டு களுக்கு பிறகு நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பவர்களை ஒப்பிட்டால் பாதியாக குறைகிறது. புகைபிடிக்கும் பழக்கத்தை விட்ட முதல் வாரம் சிரமமாக இருக்கும். எனினும், இதனால் கிடைக்கும் பலன், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.புகை பிடிப்பவர்கள் பச்சை காய்கறிகளை அதிகமாக உண்ணவேண்டும்,இயற்கை பழச்சாறுகளை அதிகம்  பருகவேண்டும்,இவ்வாறு  தொடர்ந்து சாப்பிட்டுவர  உடலில் புதிய கலங்கள் பெருகி பாதிப்புக்களை கட்டுப்படுத்துகிறது.

 

Tags

Leave Comment |

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

(required)
(required)

A- A A+