Today:

கடின பயிற்சி வெற்றியை இலகுவாக்கும் – விராத் க்ஹோலி

Posted by YAALAN0

விராத் க்ஹோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கடின இலக்கை சவாலாக துரத்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்,வெற்றி பெற்றதும்  நிலத்தில் விழுந்து வணங்கி,வானை நோக்கி ஆட்காட்டி விரலை காட்டி தனது வெற்றிக்கு காரணம் அந்த எங்கும் வியாபித்துள்ள பிரம்மம்தான் என்பதை குறியீடாக காட்டியிருந்தார்.எம்மையும் எல்லாவற்றையும் படைத்த பிரம்மம் எங்கள் கூடவே எப்பவும் இயங்கி வருகின்றது,எமது அறியாமை காரணமாக நாம் அதை தெரிந்துகொள்ளமுடியாமல் தவிக்கின்றோம்,தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட ஒன்றில் தொடர்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் அதில் மனதை குவிப்பதன் மூலம் இந்த பிரபஞ்ச பேராற்றலை அனைவரும் பெறமுடியும் என்பதே உண்மை,பிரபஞ்சமும் நமது மனமும் ஒன்றுதான்,உள்ளால் இணைக்கப்பட்டுள்ளது.எனினும் உலக காரணிகளால் அந்த இணைப்பை எம்மால் உணரமுடிவதில்லை,கடின பயிற்சி மூலம் மனதை பிரபஞ்சஇயக்க நிலைக்கு கொண்டு செல்வதன் மூலம் நாம் அசாதாரணமாக நினைக்கும் காரியங்களையும் சாதரணமாக செய்து முடிக்கலாம்,கர்ம யோகம் என்பது தாம் செய்ய ஏற்றுகொண்ட செயலாகவே தம்மை மாற்றிக்கொள்வது.யார் செய்கிறார்கள்? என்ன செய்கிறார்கள் ? என்பதில் கர்ம யோகம் ஒருபோதும் தங்குவதில்லை.அது செயலை செய்யும் விதத்தில் மட்டுமே தங்குகின்றது.பயிற்சியின் மூலம் மனதை எவ்வளவுக்கு எவ்வளவு ஒருமுகப்படுத்துகின்றோமோ அவ்வளவுக்கு பிரபஞ்ச ஆற்றலை பயன்படுத்தி அதன் பயனை பெற்றுக்கொள்ள முடியும்,நம்மையும் இந்த உலகையும் எல்லாவற்றையும் படைத்த ஆற்றல் எவ்வளவு பெரியதாக இருக்கும்,அதனுடன் தொடர்பை பேணுவதால் நாம் அதன் வழியில் செல்கின்றோம் என்பதை உறுதிப்படுத்துகொள்கின்றோம்.இதன் காரணமாக உலகியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதுடன் அதேசமயம்  பிரம்மதுடனும் உறவை கட்டியெழுப்பிகொள்வதால் ஒரே நேரத்தில் இம்மை வாழ்வையும் மறுமை வாழ்வையும் சரியான பாதையில் உறுதிசெய்துகொள்கின்றோம்.

இவை அனைத்துக்கும் அடிப்படையாக தேவைப்படுவது செயலை மேற்கொள்வது மட்டுமே,செயலில் சிறுது.பெரிது என்று எதுவும் இல்லை,மனதை முழுமையாக ஒருமுகப்படுத்தி செய்,கீதை,வேத உபநிடதங்களை அனைத்தும் கூறும் கருத்துகளை  ” செய் ” என்ற ஒற்றை சொல்லுக்குள் அடக்கிவிடலாம்.

ஆகவே ”செய்”  என்பதன் முக்கியத்துவத்தை அறிந்து செயல் செய்வதன் மூலம் எம்மை படியேற்றிகொள்ளலாம்.

 

Tags

Leave Comment |

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

(required)
(required)

A- A A+