Today:

உணவே மருந்து , மருந்தே உணவு

Posted by YAALAN0

விவேகம் என்பது பகுத்தறிவது,உடலுக்கும் மனதுக்கும் தேவையான சக்திகள் அனைத்தும் உணவில் அடங்கியுள்ளது.நாம் உட்கொள்ளும் உணவு எங்கள் உடலில் பல இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு,கிரகிக்கப்பட்டு உடலிற்கு புதிய  வளர்ச்சியை கொடுக்கின்றது. உடலும்,மனமும் உட்கொள்ளும் உணவில் இருந்து  அடிப்படையில் வேறுபட்டது அல்ல,எவ்வாறு உலகில் நாம் காணும் சக்தியும்,சடப்பொருளும் நமது மனமாகவும் உடலாகவும் ஆகியுள்ளனவோ,அதுபோல உடலுக்கும் மனதிற்கும்,உணவுக்குமிடையில் உள்ள அடிப்படை வேற்றுமை எல்லாம் வெறும் தோற்றத்தில் மட்டுமே

ஆகவே உணவின் சடமூலக்கூறிலிருந்து நமது எண்ணக் கருவியையும், இந்த மூலக்கூறுகளில் தங்கியுள்ள நுண் ஆற்றல்களில் இருந்தும் எண்ணங்களையும் நாம் உற்பத்தி செய்கிறோம்.அதனால் நம் எண்ணங்களும் நாம் உண்ணும் உணவிற்கும்  ஏற்பவே உருவாகின்றன என்பது தெளிவு. குறிப்பிட்ட சிலவகை உணவுகள் மனதில் குறிப்பிட்ட மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. நாளடைவில் மனதையும் பெருமளவிற்கு பாதிக்கின்றன.நமது துன்பங்களில் கணிசமானவை நாம் உண்ணும் உணவிலிருந்து உணவின் காரணமாக வருகின்றன.செரிபதர்க்கு கடினமான உணவை வயிறு புடைக்க சாப்பிட்டுவிட்டு மனதை கட்டுப்படுத்துவது சிரமமான செயல்.மனம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் உணர்சிகளை தூண்டுகின்ற உணவுகளை உண்டால் மனதை அடக்கமுடியாமல் போய்விடும்.

உணவில் தவிர்க்கவேண்டிய மூன்று விசயங்கள்

1.உணவின் வகை – உணர்ச்சியை த்ஹோண்டும் உணவுகள்

இறைச்சி,இயற்கையாக அவை அசுத்தமானது,எனவே அதை உண்ணக்கூடாது,உயிரை கொன்றே இறைச்சியை  பெறுகின்றோம்,இறைச்சி  உண்ணும் ஒவ்வொருவனும்  உயிர்களை கொல்ல வேண்டியுள்ளது மட்டுமல்ல மற்றவர்களையும் நாம் தீயவழியில் செலுத்த நேருகின்றது.இதற்கென்ன ஒரு கூட்டம் சமுதாயத்தில் உருவாக்கப்படுகிறார்கள்.இறைச்சி மட்டுமில்லாமல் உணர்வை தூண்டக்கூடிய வெங்காயம்.பூண்டு என்பவற்றையும் விளக்கவேண்டும்.

2. ஒவ்வொரு மனிதனையும் ஒரு குறிப்பிட்ட ஒளி அதிர்வு சூழ்ந்து உள்ளது ,அவன் எதை தொட்டாலும் அவனது இயல்பின் ஒரு கூறு, அதாவது அவனுடைய குணம் அந்த பொருளில் பதிகின்றது.ஆகவே மற்றவர்கள் சமைக்கும் பரிமாறும் உணவுகளில் அவர்களின் இயல்புகளின் கூஐகள் பதிந்து எமக்குள் வந்தடைகின்றன.

3.உணவில் உள்ள தூசு,அழுக்குகளை நீக்கி சமைத்தல்,மற்றவர் எச்சில் பட்ட உணவுகளை உண்ணாமல் தவிர்த்தல்,எச்சில் மூலம் ஒருவரின் குணம் மற்றவர்களுக்கு மிக எளிதாக பரவுகின்றது.

எனவே இவ்வாறனவற்றை  அறிந்து தவிர்ப்பதன் மூலமும்  தூய உணவை உண்ணுவதன் மூலம் தூய மனதை பெற்று வாழ்வில் சிறப்பு பெறலாம்

Tags

Leave Comment |

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

(required)
(required)

A- A A+