Today:

இயற்கை என்னும் . . .

Posted by YAALAN0

மனிதம் குழந்தையாக பிறந்து தவழ்ந்து சிறுது சிறிதாக ஐம்புலன்களையும் விரித்து சூழலை அறிந்து தனது வேரை பரப்பியவாறு வளர்கின்றது.சூழல் காரணிகள் தூண்டல்களுக்கு ஏற்றவாறு துலங்கியவாறு அவற்றுடன் இடைத்தொடர்புகளை கட்டி எழுப்புகின்றது.இயற்கையுடன் இயைந்த நாகரீகத்தை தோற்றுவித்து அதனுடன் ஒருங்கிணைந்த வளர்ச்சிப்பாதையில் வந்த மனிதத்துக்கு மதம் பிடித்து போகவே மனித தேவைகள் அசாதாரணமாக அதிகரிக்க இயற்கைக்கு  மாறான விதத்தில்  மனித நாகரீகத்தின் பாதை தனிவழி அமையவே மனித இனத்தின் இருப்பு கேள்விக்குறியாக தொடங்கியது.

இயற்கையின் அழிவில் தமக்கு ஆக்கம் உண்டென கருதும் மனித இனம் தனது இருப்புக்காக இயற்கையை அழிக்கின்றது.இயற்கையின் குழந்தையான மனிதன் தனது தாயின் சமநிலையை குழப்பும் போதெல்லாம் பெரும்பாலான நேரங்களில் அமைதி காக்கும் இயற்கை அவ்வவ்பொழுது  மனிதனை அழித்து சமநிலையை பேணுவதுடன் மனித வளர்ச்சிக்கு ஆதாரமாக தொடர்ந்தும் செயல்பட்டு வருகின்றது.

மனித இனம் உயிர்பெற்று எழ,மனிதன் இயற்கைக்கு திரும்பி இயற்கையுடன்  அறுந்துபோன உறவை மீண்டும் கட்டியெழுப்பி

இயற்கையுடன் இணைந்த நாடு

இயற்கையுடன் இணைந்த நாகரீகம் என வாழத்தொடங்கும் போதே  உலகில் உண்மையான அமைதி தோன்றி நீடிக்கும்.

Slide3

”குழந்தையை இயற்கையிடம் விட்டுவிடுங்கள்,இயற்கை ஆசிரியராக மாறி கற்பிக்கட்டும்” ரூஷோ

Tags

Leave Comment |

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

(required)
(required)

A- A A+