Today:

மக்கள் உரிமை என்னும் மாயை

Posted by YAALAN0

மக்கள் உரிமை என்ற பெயரில் தங்கள் சுயநலனுக்காக ஒட்டுமொத்த சமுதாய நன்மையையும் காவு கொடுக்க துணியாதவர்கள் மக்களில் வெகு சிலரே,
இவ்வாறான முட்டாள் கூட்டத்திற்கு தர்க்கரீதியான அறிவுரைகள் வழங்கியும் ஆழ்ந்த விவாதங்கள் புரிந்தும் இம்மக்கள் கூட்டத்தை வழிநடத்த முடியும் என்று பகுத்தறிவுள்ள எந்த மனிதனாவது நம்புவானா ? அது சாத்தியமா ?
நியாயபூர்வமான கருத்துக்களுக்கு மக்கள் உரிமை என்ற போர்வையில் யாரும் என்ன மறுப்பு வேண்டுமானாலும் கூறமுடியும்,இந்த மறுப்புக்கள் முட்டாள்தனமாக இருந்தபோதிலும் மக்கள் தங்கள் நிகழ்கால,எதிர்கால சுயநலன்களை பாதுகாத்துகொள்ள அதை உளறுகிற முட்டாள்கள் பின்னால்தால் செல்வார்கள் என்ற நிலை இருக்கும் போது அறிவுரை மூலமாக மக்களை வழிநடத்தமுடியும் என்பதை எதை வைத்து நம்புவது ?
மக்கள் உரிமை என்ற போர்வையில் மக்கள் எடுக்கும் எல்லா முடிவுகளும் எதன் அடிப்படையில் அமைந்திருக்கின்றன என பார்தோமானால்
ஒன்று சந்தர்ப்பத்துக்கு தகுந்தாற் போல் உள்ளது
அல்லது பெரும்பான்மை என்ற அடிப்படையிலேயே இருக்கிறது.
மக்கள் உரிமை என்ற பெயரில் மக்கள் தங்கள் உண்மை மதிப்பை இழந்து போகின்றார்கள் . . .
காலப்போக்கில் பிரிந்து சிதைந்து வரலாற்றில் காணாமல் போவார்கள்,கட்டுப்பாடான வாழ்க்கையில் இருந்தே விழிப்புணர்வு தோன்றும்,உயரிய சாதனைகளை புரிந்து உலக ஒழுங்கின் பெரும் சாதகங்களை எமது இனத்தின் பக்கம் திருப்புவதன் மூலமே நீடித்து நிலைக்க முடியும்

Tags

Leave Comment |

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

(required)
(required)

A- A A+