Today:

எழுத்தும் எதிர்ப்பும் பகுதி II

Posted by YAALAN0

உங்கள் முன்னால் இருக்கும் அனைத்தையும்

விலைக்கு வாங்குவது

களங்கப்படுத்துவது

அடக்கியாள்வது

தகர்த்துநொறுக்குவது

ஒழித்துக்கட்டுவது ஆகியவற்றை வழக்கமாக கொண்டிருக்கும்  நீங்கள் இன்று சுயமரியாதையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு உள்ளானவுடன் ஆர்ப்பரிப்பதில் எந்த நியாயமும் இல்லை

 

எந்த தொலைநோக்குமற்று நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி தேசிய இறையாண்மையை பலி கொடுக்கின்ற ஓர் அமைப்பின் அதிகாரபூர்வமான வாரிசாக இருக்கின்றீர்கள்

 

ஜனநாயகம்,சுதந்திரம்,நீதி என்பவை மிகவும் உன்னதமான சொற்களாக மட்டுமன்றி,யதார்த்த நிலையாகவும் இருக்கவேண்டும் என்று கருதுபவர்கள் நாங்கள்

இந்த இலட்சியத்தை அடையாமல் வாழ்வது எங்களை பொறுத்தவரை அவமானகரமானது,இந்த இலட்சியத்துக்காக போராடி உயிர் விடுவது கெளரவமானது

எங்கள் கையில் ஆயுதங்களை ஏந்தவேண்டும் என்கின்ற சாபமும்,சுயமரியாதையின் வரலாற்றை காப்பாற்றுகின்ற கௌரவமும் எங்களுடைய பெயர்களுடன் சேர்ந்தே வருகின்றது

ஒரு மாபெரும் சவக்குழிக்கும்,உடனடியான மறதி(சாவு) எனும் பாதாளத்திட்கும் செல்வதற்காக காத்திருப்பவர்கள் நாங்கள்

 

நாங்கள் மனிதர்கள் அடிமையாக இருப்பார்களானால் அவர்கள் விடுதலை அடைவதற்காக போராட வேண்டும்,அவர்கள் விடுதலையடைந்தால் மற்ற மனிதர்களின் விடுதளிகாக போராட வேண்டும்.இந்த இலட்சியத்தை சுயமரியாதை என்கின்ற சொல்லோடு சேர்த்து மீட்டு எடுத்தவர்கள் நாங்கள்

 

தனது மூர்க்கதனம்,அதிகாரம் ஆகியவற்றின் விளைவாக எங்களை வெறுப்போடு பார்கின்ற ஒருவர் எங்களது நியாயமான சிந்தனைக்கு விடையாக எங்களுக்கு சாவை தருகின்ற ஒருவரின் அவமதிப்புகளையும்,இழிவுகளையும் கேட்டுக்கொள்வதற்காகவோ,அவற்றிடம் அடிபணிவதற்காகவோ  எங்கள் கைகள் ஆயுதம் ஏந்தவில்லை

 

ஒரு குரல்

 

அந்த குரல் ஆற்றல் வாய்ந்ததாகவும்

மிகபெரியதாகவும் மாறியது.

எங்கள் வேதனைகளை ஆற்றும் மருந்தாக மாறியது.

காத்திருப்பதன் மூலம் நாங்கள் நம்பிக்கையை அறுவடை செய்தோம்

நாங்கள் எடுத்து வைக்கும் காலடிகளின் மூலம் நடக்கின்ற கூட்டு உள்ளத்தில் அந்தக்குரல் ஒரு விதையாக விழுந்தது.

மரணம் அமைதியான பாதைகளை தேடுகின்றது.

தனக்கு ஒத்துழைக்கின்ற இருளையும்,மூடி மறைக்கின்ற மௌனத்தையும் அது தேடுகின்றது.

 

தங்களை தாங்களே அறிவதற்கும்,மற்றவர்களின் இதயத்தை தொடுவதற்காகவும் வார்த்தையையும் மௌனத்தையும் பரிசாக பெற்ற எங்கள் முன்னோர்கள்தான்  எண்களின் அக்கறைக்குரியவர்களாக இருக்கின்றார்கள்.

நம்மை சிறியவர்கள் ஆக்குவதற்காக நமது வேதனைகளிடம் அதிகாரத்தால் கொடுக்கபட்டிருக்கும்  ஒன்றுதான் மௌனம் என்பதாகும்.

நாம் மௌனமாக்கப்பட்டால் நாம் தனிமைபடுத்தபடுவோம்.பேசுவதின் மூலம் நம்மால் வேதனைகளை ஆற்றுவதற்கு இயலும்.பேசுவதின் மூலம் நாம் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கின்றோம்,

அதிகாரம் தனது மௌன  ராஜ்ஜியத்தை நிலைநாடுவதற்காக வார்த்தையை பயன்படுத்துகிறது

தமது குற்றத்தை மறைப்பதற்காக மௌனத்தை பயன்படுத்துகிறது.

நாமோ ஒருவருக்கொருவர்  செவிமடுப்பதற்காக ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக மௌனத்தை பயன்படுத்துகின்றோம்  இதுதான் ஆயுதம்

நாம் பேசுகின்றோம் ,வார்த்தை நிலைத்து விடுகின்றது.

நாம் வார்த்தையை பேசுகின்றோம்

நாம் வார்த்தையை உரக்க சொல்கின்றோம்

நாம் வார்த்தையை முழங்குவதன் மூலம்

நமது மக்களின் மௌனத்தை தகர்கின்றோம்

நாம் வார்த்தையாக வாலவதனம் மூலம் மௌனத்தை கொல்கின்றோம்.

பொய் எதை பேசுகின்றதோ,பொய் எதை பேச விடாமல்  அடக்குகிறதோ,அதிலேயே உழலும்படி அதிகாரத்தை தனியாக விட்டு செல்வோம்

 

நமக்கு விடுதலை அளிக்கின்ற வார்த்தையிலும் மௌனத்திலும் நாம் ஒன்றாக சேர்வோம் . . .

 

 

 

 

 

 

 

 

 

 

Tags

Leave Comment |

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

(required)
(required)

A- A A+